2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

'போதைவஸ்தின் மூலம் சமூகப் பிரச்சினை தோற்றுவிக்கப்படுகின்றது'

Niroshini   / 2016 ஜனவரி 04 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எல்.லாபீர்

கஞ்சா, மதுபானம் மற்றும் இதர போதைவஸ்துக்களை பாவித்து சிறு பிரச்சினைகளை ஏற்படுத்திப் பின்னர் அதனை சமூகப் பிரச்சினையாக மாற்ற சிலர் முயற்சிக்கின்றனர் என யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எவ்.யூ.வூட்லர் ஞாயிற்றுக்கிழமை (03) தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், பொம்மைவெளிப் பகுதியில் கடந்த 2ஆம், 3ஆம் திகதிகளில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்று அப்பகுதியில் பதற்ற நிலைதோன்றியது. இதனையடுத்து, பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் மேற்படி பகுதி கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், மோதல் சம்பவம் தொடர்பில் வூட்லர் தலைமையில் மஸ்ஜித் அபுபக்கரில் கிராமஅலுவலர், சிவில் பாதுகாப்பு குழு விசேட கூட்டம் நடைபெற்றது. இதன்போதே வூட்லர் மேற்கண்டவாறு கூறினார்.

சிறு பிரச்சினையை சமூகப் பிரச்சினையாக மாற்ற முயல்கின்றனர். நான் இருக்கும் வரை அது நடைபெறாது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும். ஆனால் சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாமல் இருக்கின்றனர்.

இந்தப் பிரதேசத்தில் வாழும் வாலிபர்கள் மாலை 5.30 மணிக்கு மேல் அநாவசியமாக வீதியில் திரியக்கூடாது. இந்தப் பிரச்சினை மீண்டும் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழவேண்டும் என மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X