2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

‘பிரதேச செயலகத்தை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டம் செய்வோம்’

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 06 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

“பாதுகாப்புப் படைகளுக்காக நிலச் சுவீகரிப்பு செய்யவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்த நிலையில், அரசாங்கம் இதுவரை அது தொடர்பில் எந்தவித பதிலையும் வழங்கவில்லை” என, தெரிவித்த தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், “இது தொடர்பில் அராசாங்கம் மெளனம் சாதிப்பது ஏன்?” என்றும் கேள்வியெழுப்பினார். 

யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் குறித்துக் கேட்டபோதே, அவர் இதனை நேற்று கூறினார்.

இது தொடர்பில், யாழ். மாவட்டச் செயலாளருடன் கலந்துரையாடுவதற்காக, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், யாழ்ப்பாணத்துக்கு 9ஆம் திகதி வரவுள்ளார்.  இதன்போது, காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம். இந்தப் போராட்டத்தில் வட மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X