2025 ஜூலை 19, சனிக்கிழமை

பிரதேச செயலாளரின் வாகனம் விபத்தில் சேதம்

Niroshini   / 2016 ஜனவரி 05 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கோண்டாவில் இராச வீதிச் சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (05), கோப்பாய் பிரதேச செயலரின் வாகனமும் சொகுசு பஸ்ஸூம்  மோதி விபத்துக்குள்ளானதில் பிரதேச செயலாளரின் வாகனம் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் எவருக்கும் காயங்கள், உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லை என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய சொகுசு பஸ் சாரதியை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X