2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'பிரபாகரன் சந்தர்ப்பங்களை தவறவிட்டவர்'

George   / 2017 ஜனவரி 23 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, அரசிடம் பேரம் பேசும் சந்தர்ப்பம் கிடைத்த போதும், அவர் அதனை பயன்படுத்தவில்லை” என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசிடம் பேரம் பேசும் சந்தர்ப்பம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த போதும் அவர்கள் அதனை பயன்படுத்தவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அச்சந்தர்ப்பம் பல முறை கிடைத்தது. ஆனால் சுயலாபத்துக்காக அவர் அதனை பயன்படுத்தவில்லை.

இலங்கை இந்திய ஒப்பந்தம், பிரேமதாச, சந்திரிக்கா, மஹிந்த, ரணில் ஆகியோருடன் பேச பல சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் அவர் சுயலாபத்துக்காக அவர்களுடன் பேசவில்லை” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X