2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

'பிரபாகரன் மாத்திரமே தேசியத் தலைவர்'

Niroshini   / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழர்களின் தேசியத் தலைவர் என்று கூறுகின்ற ஒரே தலைவர் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தான். அவருக்கு முன்பு ஒரு தேசிய தலைவர் இருந்ததில்லை. அதற்கு பின்னும் இன்னொரு தேசியத் தலைவர் உருவாகப்போவதுமில்லை என வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை(30) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

பிராந்தியங்களின் ஒன்றியம் என்பது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவின், அரசியல் தீர்வு முன்மொழிவுகளில் உள்ளடக்கப்பட்ட விடயமாகும்.

ஒற்றையாட்சி முறையிலிருந்து மாறுபட்டு, அது ஏற்றுகொள்வதற்கான முறைமையை கொண்டு வருவதற்காகதான் பிராந்தியத்தின் ஒன்றியம் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கின்றது.

எமது பிராந்தியம் வடக்கு, கிழக்கு இணைந்த தாயகம். அது பிழையான விடயம் அல்ல. அது, ஒரு விதமான சமஸ்டி அமைப்பு முறைதான் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X