2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

3,895 பேருக்கு மாதாந்த உதவி கொடுப்பனவு வழங்கப்படுகிறது

Sudharshini   / 2016 ஜனவரி 31 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேசத்தில் 3,895 பேருக்கு மாதாந்த உதவிக்கொடுப்பனவு வழங்கப்பட்டு வருவதாக கரைச்சிப்பிரதேச செயலகத்தின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் திணைக்களத்;தி ஊடாக 3,895 பேருக்கு பொதுசன மாதாந்த உதவிக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனைவிட 124 பேருக்கு புற்றுநோய்க்கான கொடுப்பனவுகளும் 11 பேருக்கு காசநோய்க்கான கொடுப்பனவுகளும் 84 பேருக்கு சிறுநீரக நோய்க்கான கொடுப்பனவுகளும் இரண்டு பேருக்கு தொழுநோய்க்கான கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்;ட 52 பேருக்கு தலா 1,500 ரூபாய் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டு வருவதாக கரைச்சிப்பிரதேச செயலகத்தின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளைஇ திரிசவிய திட்டத்தின் கீழ் 118 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 3,000 ரூபாய் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X