2025 ஜூலை 23, புதன்கிழமை

'புலிகளின் முக்கிய தளபதிகளை பஸ்ஸில் ஏற்றும்போது கண்டேன்'

Niroshini   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளான பாப்பா, இளம்பரிதி, எழிலன், பாபு, ரூபன், வேலவன், தங்கன், லோரன்ஸ் ஆகியோருடன் எனது கணவர் உட்பட சுமார் 60 பேரை ஒரு பஸ்ஸில் இராணுவத்தினர் ஏற்றிச் செல்வதை அவதானித்தேன் என இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமற்போன விடுதலைப் புலிகளின் நிதித்துறைப் பொறுப்பாளரான மணிவண்ணன் என்று அழைக்கப்படும் சூசைப்பிள்ளை வரதராஜாவின் மனைவி சாந்தினி சாட்சியமளித்தார்.

காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உடுவில் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளுக்கான அமர்வு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (16) நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.

எனது கணவரை 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி இராணுவத்தினரிடம் நானே கையளித்தேன். ஒருநாள் புலிகள் அமைப்பில் இருந்தாலும், சரணடையுமாறு இராணுவத்தினர் விடுத்து கோரிக்கைக்கு அமைய கையளித்தேன்.

கணவனைக் கையளித்து சுமார் 30 நிமிடங்கள் அவ்விடத்தில் நின்றேன். இதன்போது, முக்கிய தளபதிகள் உட்பட சுமார் 60 பேர் வரையில் ஒரு பஸ்ஸில் ஏற்றிச் செல்வதை அவதானித்தேன்.

அதன் பிறகு இராணுவ உத்தரவுக்கமைய முகாமுக்குச் சென்றேன். இராணுவத்தை நம்பியே நான் எனது கணவரை ஒப்படைத்தேன். ஆனால் இன்றுவரையில் எனது கணவருக்கு என்ன நடந்தது என்பது தெரியாதுள்ளது என்றார்.

மேலும், 2009 மே மாதம் 15ஆம்,16 ஆம் திகதிகளில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த நடேசன், புலித்தேவன் ஆகியோரை கண்டதாகவும் அவர் கூறினார்.

இவர்கள் இருவரும் மறுநாள் 17 ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .