2025 ஜூலை 23, புதன்கிழமை

'மகளிர் அமைப்புக்களை வலுவான கட்டமைப்பாக மாற்றுவதற்கு நடவடிக்கை'

Niroshini   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு தேவையான உதவிகளை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, மகளிர் அமைப்புக்களை வலுவான கட்டமைப்பாக மாற்றுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அமைப்பினருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவுக்கும் இடையே நேற்று செவ்வாய்க்கிழமை முள்ளியவளை மகளிர் சங்கத்தினரின் கட்டடத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மகளிர் அமைப்புகள் மத்தியில் தொடர்ந்தும் பேசிய அவர் குறிப்பிடுகையில்,

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எமது முல்லைத்தீவு மாவட்டம் கூடுதலான இழப்புக்களை சந்தித்துள்ளது. இன்று வரைக்கும் அபிவிருத்தியில் பின்தங்கிய நிலையிலேயெ காணப்படுகிறது.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் நான் நன்கு அறிவேன். இந்த பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்யவுள்ளேன்.

எனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவுத்திட்ட நிதியினூடாக பெண்களின் வாழவாதார மேம்பாடு மற்றும் கிராமிய உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .