2025 ஜூலை 19, சனிக்கிழமை

மணல் கடத்தியவருக்கு அபராதம்

Niroshini   / 2016 ஜனவரி 07 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அனுமதிபத்திரம் இன்றி உடுப்பிட்டி பகுதியில் இருந்து இலக்கணாவத்தை பகுதிக்கு மணல் ஏற்றி வந்த உழவு இயந்திர சாரதிக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் பெருமாள் சிவகுமார் புதன்கிழமை (06) தீர்ப்பளித்தார்.

வெள்ளிக்கிழமை (01) உடுப்பிட்டி பகுதியில் வீதி ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த வல்வெட்டித்துறை பொலிஸார், சந்தேத்துக்கிடமான முறையில் வந்த உழவு இயந்திரத்தினை மறித்து சோதனையிட்ட போது குறித்த உழவு இயந்திரத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி கொண்டு வரப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட உழவு இயந்திர சாரதிக்கு எதிராக வல்வெட்டித்துறை பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சாரதி குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து, மணலை பறிமுதல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதி, சாரதிக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X