2025 ஜூலை 23, புதன்கிழமை

'முல்லை உள்ளூராட்சி மன்ற வீதிகளை புனரமைக்க 5,578 மில்லியன் ரூபாய் தேவை'

Niroshini   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் வீதிகளை புனரமைப்பதற்கு 5,578.2 மில்லியன் ரூபாய் நிதி தேவையாகவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகப் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு கீழான வீதிகள், கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக எந்தவித புனரமைப்பு பணிகளும் இன்றிக் காணப்படுவதுடன் சில வீதிகள் பயணிக்க முடியாத நிலைகளில் கைவிடப்பட்டும் காணப்படுகின்றன.

கரைதுரைப்பற்று பிரதேசத்தில் 136.92 கிலோமீற்றர் நீளமான 42 வீதிகளை புனரமைக்க 2029 மில்லியன் ரூபாயும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 133.71 கிலோமீற்றர் நீளமான 38 வீதிகளை புனரமைக்க 251 மில்லியன் ரூபாயும் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 53.78 கிலோ மீற்றர் நீளமான 38 வீதிகளை புனரமைக்க 496.7 மில்லியன் ரூபாயும் துணுக்காய் பிரதேசத்தில் 34.37 கிலோமீற்றர் நீளமான 15 வீதிகளை புனரமைக்க 377 மில்லியன் ரூபாயும் மாந்தை கிழக்குப் பிரதேசத்தில் 113.9 கிலோமீற்றர் நீளமான 18 வீதிகளை புனரமைக்க 1642.5 மில்லியன் ரூபாயும் வெலிஓயா பிரதேச வீதிகளை புனரமைக்க 782 மில்லியன் ரூபாயும் தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .