2025 ஜூலை 19, சனிக்கிழமை

'மீள்குடியமர்த்தப்பட்டால் 38 நலன்புரி முகாம்களையும் மூடலாம்'

Niroshini   / 2016 ஜனவரி 10 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மயிலிட்டி பகுதியில் மக்கள் குடியமர்த்தப்பட்டால் யாழ்ப்பாணத்தில் உள்ள 38 நலன்புரி முகாம்களையும் மூடலாம். ஏனெனில், இம்முகாம்களில் உள்ள மக்கள் அனைவரும் இப்பகுதியை சேர்ந்தவர்கள். இவ்வாறு மக்கள் குடியமர்த்தப்பட்டால் தமது வாழ்வாதாரத்தை மீன்படி மூலம் உயர்த்திக்கொள்வார்கள் என்று அப்பகுதி மீனவ சங்கத்தினர் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்தனர்.

அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை (10) யாழ்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தில் மாவட்ட கடற்றொழில் சங்க பிரதிநிதிகளுடன் சந்திபொன்றை மேற்கொண்டார்.

இதன்போதே, மீனவ பிரதிநிதிகள் அமைச்சரிடம் இவ்வாறு தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X