2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மீள்குடியேறிய மக்களுக்கு நிரந்தர வீடுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

Niroshini   / 2016 மார்ச் 08 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வளலாய் பகுதியில் மீளக்குடியேறிய மக்களுக்கு நிரந்தர வீடுகள் பெற்றுக்கொடுப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை பிரதேச செயலகம் தற்போது மேற்கொண்டு வருகின்றது.

உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்த வளலாய் பகுதியின், மேற்கு பகுதி கடந்த 2013ஆம் ஆண்டும் வடக்குப் பகுதி கடந்த 2015ஆம் ஆண்டும் விடுவிக்கப்பட்டு, மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டது.

வளலாய் பகுதியில் மீளக்குடியேறுவதற்கு 660 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ள போதும், ஒரு சில குடும்பங்களே தமக்கு கிடைத்த தற்காலிக கூடாரங்களில் மீளக்குடியமர்ந்துள்ளன. ஏனைய குடும்பங்கள் வசதி வாய்ப்புக்கள் கருதி வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், மீளக்குடியேறியுள்ள மக்களுக்கு நிரந்தர வீடுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில், தற்காலிக கூடாரங்களில் மீளக்குடியேறிய மக்களுக்கு, நிரந்தர வீடுகள் பெற்றுக்கொடுப்பதற்கு கிராமஅலுவலர் ஊடாக தரவுகள் சேகரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X