2025 ஜூலை 17, வியாழக்கிழமை

யாழ். பல்கலையில் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா உக்குளாங்குளத்தில் 14 வயது மாணவி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை (25) மேற்கொள்ளப்பட்டது.

'கைகட்டி வேடிக்கை பார்க்க, நாம் ஒன்றும் கையாலாகாதவர்கள் அல்ல', 'சிறை என்ன குற்றவாளிகளின் பாதுகாப்பு கூடமா?' ஆகிய வாசகங்களை தாங்கியவாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக பீடங்களின் மாணவர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X