Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 பெப்ரவரி 08 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஸன்
'வடபகுதி கடற்பரப்பில், இந்திய மீனவர்கள் தொழிலில் ஈடுபடுவதற்கு, இணக்க அடிப்படையிலோ, கால அவகாசத்தையோ அல்லது எமக்கான நிரந்தரத் தீர்வு கிடைக்காத வரையில் பிடிக்கப்பட்டிருக்கின்ற இந்திய மீனவர்களது படகுகளை மீள வழங்குவதற்கோ, ஒரு போதும் அனுமதி வழங்கப்போதில்லை' என, வட மாகாண கடற்தொழிலாளர் இணையம் தெரிவித்தது.
'இவ்வாறான நிலைப்பாட்டுடன் நாங்கள் இருக்கின்ற போது, இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும், எங்களைத் தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றன. எனவே, இந்திய அரசின் மாய வலைக்குள் சிக்கி, வடபகுதி கடற்பரப்பை தாரைவார்க்க வேண்டாமென, இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்' என்றும், மேற்படி சங்கப் பிரதிநிதிகள், கூட்டாகத் தெரிவித்தனர்.
யாழ். ஊடக அமையத்தில், செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அங்கு அவர்கள் மேலும் கூறியதாவது,
'இந்திய மத்திய அரசாங்கம், இழுவைப்படகுத் தொழிலை நிறுத்துவதற்கு உடன்பட்டிருக்கின்றதாக அறிகிறோம். ஆனாலும், இலங்கையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் என்ன பதில் கூறப்பட்டதென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், ஊடகங்னளூடாக, சாதகமான பதில்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்.
டில்லியின் மாய அரசியலுக்குள் சிக்கி, வடபுல கடல்வளத்தை தாரை வார்க்க வேண்டாம் என்று இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்' என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago