Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
வடமாகாண சபை கலைப்படவுள்ளதாக பத்திரிகையொன்றில் வெளியாகிய செய்தியானது, தனியே பரபரப்புக்காக வெளியிடப்பட்ட செய்தியாகும். இது சபையின் சிறப்புரிமையை மீறும் விடயமாகும். இது தொடர்பில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கவனம் செலுத்த வேண்டும் என வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் கேசவன் சயந்தன் கோரிக்கை விடுத்தார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று புதன்கிழமை (30) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
'சட்ட வரைபுகளுக்கு அப்பாற்பட்டு இந்தச் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. மக்களை குழப்பத்துக்குள்ளாக்கும் வகையில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. செய்தி தொடர்பில் நடவடிக்கை வேண்டும்' என்றார்.
அதற்குப் பதிலளித்த அவைத்தலைவர்,
'வடமாகாண சபையை கலைப்பது முடியாது. ஆளுநரால் கூட உடனடியாக கலைப்பதற்கு அரசியலமைப்பில் இடமில்லை. முதலமைச்சரின் சிபார்சின் மூலமே ஆளுநர் கலைக்க முடியும்.
அத்துடன், இதற்கு அமைச்சர்கள் மற்றும் அவைத்தலைவர் ஆகியோரின் ஒத்துழைப்பு அவசியம். மத்திய அரசாங்கம் கலைப்பதற்கும் சட்ட வரையறைகள் உள்ளன. செய்தி தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
16 minute ago
19 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
48 minute ago