Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 15 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
காணாமற்போனோர் தொடர்பில் விசேட நீதிமன்றம் உருவாக்கப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விசாரணை செய்யப்படுவார்கள் என காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் சங்கானை மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்டவர்களுக்கான அமர்வு சங்கானை பிரதேச செயலகத்தில் இன்று (15) நடைபெற்ற போது, ஆணைக்குழுவின் விசாரணையின் முடிவில் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காணாமற்போனோரின் உறவினர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
ஆணைக்குழுவால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, விசாரணை அறிக்கையானது சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்படும்.அந்த அறிக்கையின் பிரகாரம் சட்டமா அதிபர் திணைக்களத்தால் விசேட நீதிமன்றம் உருவாக்கப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விசாரிக்கப்படுவார்கள் என்றார்.
மேலும்,விசேட நீதிமன்றம் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பது அரசியல் சார்ந்த விடயமாகும். ஆகையால், அதனை என்னால் கூற முடியாது. அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்துக்குச் சென்று, நீதிமன்றம் உருவாக்க சிறிது காலதாமதம் ஏற்படலாம். விசாரணைகள் சர்வதேச பொறிமுறையூடாக முன்னெடுக்கப்படுகின்றன. விசாரணையில் குற்றவாளிகள் இனங்காணப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago