2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

'விடுவிக்கப்பட்ட காணிகளில் விரைவில் மீள்குடியேற்றம்'

Niroshini   / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து செவ்வாய்க்கிழமை (29) விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேச காணிகளில், மக்களை மீள்குடியேற்றம் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக  யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வியாழக்கிழமை (31) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

அண்மையில் யாழ்ப்;பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்துக்கு 6 மாதங்களுக்குள் முடிவு எட்டப்படும் என்று வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில், கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகள் விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அந்தக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், முதற்கட்டமாக செவ்வாய்க்கிழமை (29) ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மிகுதிக் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X