2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழில் சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகம் : 10 பேருக்கு வேலை வாய்ப்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                               (ஜெ.டானியல்)
யாழில் சுத்திகரிக்கப்பட்ட நீரைப் போத்தல்களில் அடைத்து விநியோகிக்கும் திட்டத்தின் மூலம் 10 பேருக்கு வேலைவாய்பு  கிடைக்க உள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் தலைவர் ப.வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'இந்த விடயம் தொடர்பாக சபை உறுப்பினர் எஸ்.தியாகமூர்த்தி சமர்ப்பித்திருந்த பிரேரணை கடந்த திங்கட்கிழமை (20) நடைபெற்ற விசேட கூட்டத்தின் போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தத் திட்டத்திற்குப் பயன்படுத்தவுள்ள தண்ணீர், சம்பந்தப்பட்ட திணைக்களத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் சுத்திகரிப்பதற்கு உகந்த தண்ணீர் என திணைக்களத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான கேள்விப்பத்திரம் கோரப்பட்டு வேலைத்திட்டத்திட்டம் துரிதமாக முன்னெடுக்கப்படவுள்ளன.

கோண்டாவில் இருபாலை வீதியிலுள்ள ஆயுள்வேத வைத்தியசாலை அமைந்துள்ள இடத்தில் பிரதேச சபைக்குச் சொந்தமான காணி ஒன்று உள்ளது. அந்தக் கிணற்றிலிருந்தே சுத்திகரிப்பதற்கு நீர் பெறப்படவுள்ளது.

ஒரு மணித்தியாலயத்தில் எண்ணூறு லீற்றர் தண்ணீர் சுத்திகரிக்கப்படும்.  இதன்மூலம் 10 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X