2025 மே 17, சனிக்கிழமை

யாழில் டைனமற் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதான சந்தேகத்தில் 8 மீனவர் கைது

Menaka Mookandi   / 2012 ஜனவரி 12 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாக்கடலில் தடைசெய்யப்பட்ட 'டைனமற்' வெடிமருத்தைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் குருநகரைச் சேர்ந்த 8 மீனவர்களை இன்று வியாழக்கிழமை மாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட 'டைனமற்' வெடிமருந்தைப் பயன்படுத்தி சுமார் 800 கிலோ மீன்களைப் பிடித்தார்கள் என்ற சந்தேகத்தில் கைதான மேற்படி மீனவர்களை யாழ். பிராந்திய நீரியல்வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 8 மீனவர்களும் நாளை யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்த யாழ். நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .