2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மூத்த பிரஜைகளின் நிகழ்ச்சித் திட்டங்களுக்காக ரூ. 9 இலட்சம் செலவு

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 08 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

இலங்கையிலுள்ள மூத்த பிரஜைகளுக்கு மனநிலை மேம்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் ஆலோசனை வழங்கவும், ஓய்வுபெறவுள்ள அரசாங்க ஊழியர்களுக்கு முன்ஓய்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும், மூத்த பிரஜைகள் பராமரிப்பு சேவை பயிற்சி திட்டங்களுக்கும் 2014 ஆம் ஆண்டு 9 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளதாக சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி இமெல்டா சுகுமார் திங்கட்கிழமை (08) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

முதியோர்களின் நலன் தொடர்பில் சமூக சேவை அமைச்சால் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மேற்படி திட்டங்கள் தவிர, முதியோர் இல்லங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு 2.77 மில்லியன் ரூபாவும், மூத்த பிரஜைகள் காப்பாளர் திட்டத்தின் கீழ் ஆதரவற்ற மூத்த பிரஜைகளுக்கு 1 இலட்சத்து 89 ஆயிரம் ரூபாவும், கதிர்காமம், கைதடி, சாலியபுர, மீரிகம ஆகிய இடங்களிலுள்ள அரச முதியோர் இல்லங்களை புனரமைக்க 200 மில்லியன் ரூபாவும் செலவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .