2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

யாழ். வைத்தியசாலை தாதியர் 16பேருக்கு இடமாற்றம்

Menaka Mookandi   / 2014 ஜனவரி 20 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் 16 தாதியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் சங்கத் தலைவர் நல்லையா நற்குணராஜா இன்று திங்கட்கிழமை (20) தெரிவித்தார்.

'கடந்த 2 வருடங்களுக்கு மேலாக யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய தாதிய உத்தியோகத்தர்களுக்கே சுகாதார அமைச்சினால் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இடமாற்றங்கள் தாதியர்கள் விருப்பிய இடங்களுக்கே வழங்கப்பட்டுள்ளன' என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், யாழ். போதனா வைத்தியசாலையில் 80 புதிய தாதியர்களை நியமிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தமைக்கு அமைவாக தற்போது 66 புதிய தாதியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கொழும்பு, காலி, கண்டி, அநுராதபுரம், குருநாகல், போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் நற்குணராஜா மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .