2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

செவிப்புலன் சிகிச்சை முகாமில் 200 பேருக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 ஜூன் 11 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

யாழ்.பலாலி இராணுவப் படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் யாழ்.சிவில் அலுவலக வளாகத்தில் கடந்த 9-10 ஆம் திகதி வரை இடம்பெற்ற இலவச செவிப்புலன் சிகிச்சை முகாமில் 200 பேருக்கு செவிப்புலன் உபகரணங்கள் வழங்குவதற்கான பயனாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின்  ஊடக இணைப்பாளர் மேஜர் மல்லவராச்சி  புதன்கிழமை (11) தெரிவித்தார்.

மேற்படி சிகிச்சை முகாமிற்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து 663 பேர் வருகை தந்ததாகவும் அவர்களில் 200 பேர் செவிப்புலன் உபகரணங்கள் வழங்குவதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த மருத்துவ முகாமினை  4வது இலங்கை மருத்துவப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் சிதத் அமரசேகர மற்றும் பலாலி இராணுவ வைத்தியசாலையின் இரண்டாவது கட்டளை அதிகாரி கப்டன் பிரபாஷ;வரி விஜேகோன் ஆகிய வைத்தியர்களும், ஸ்ரார்கீ  நிறுவனத்தின் அனில் சவ்ஹான் மற்றும் சாய் கிரான் சத்தியநாராயண ஆகிய செவிப்புலன் நிபுணர்களும், ஸ்நேர்ஜின் நிறுவனத்தின் முகாமையாளர் டாக்டர் பிரனாந்து உட்பட 7 பணியாளர்களும் இராணுவ மருத்துவமனையின் பணியாளர்களும் இணைந்து நடத்தியிருந்தனர்.

மருத்து உபகரணங்கள் ஐக்கிய அமெரிக்காவின் ஸ்ரர்கி ஹெயரிங் எய்ட்ஸ் உற்பத்தி நிறுவனம் செவிப்புலன் உபகரணங்களை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த உபகரணங்கள் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .