2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

பனிச்சங்குளம் பஸ் விபத்தில் 38பேர் காயம்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 09 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

ஏ - 9 வீதி, பனிச்சங்குளப் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டினை இழந்த பேரூந்து ஒன்று குடைசாய்ந்ததில் அதில் பயணித்த 38 பேர் காயமடைந்தனர்.

வவுனியாவிலிருந்து - யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்து பனிச்சங்குளம் வளைவு ஒன்றில் திரும்பும் வேளையிலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேரூந்து சாரதி மாங்குளம் பொலிஸில் சரணடைந்துள்ளார். பொலிஸார் மேலதிக விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .