2025 ஜூன் 25, புதன்கிழமை

யாழ்ப்பாணத்தில் காசநோயினால் 12 பேர் உயிரிழப்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 31 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.மாவட்டத்தில் காசநோயினால் இவ்வருடம் 265 பேர் பாதிக்கப்பட்டதுடன், அவர்களின் 12 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்.மாவட்ட காசநோய் அதிகாரி எஸ்.மாணிக்கவாசகர் செவ்வாய்க்கிழமை (31) தெரிவித்தார்.

காசநோய் பீடிக்கப்பட்ட 265 பேரில் சிறுவர்கள் ஐந்து பேர் அடங்குவதுடன், இறந்தவர்கள் அனைவரும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் என  தெரிவித்தார்.

அத்துடன், காசநோயினால் பீடிக்கப்பட்டவர்களின் தொகையானது கடந்த வருடத்தினை (2012 - 319 பேர்) விட இவ்வருடம் குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .