2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத மதுபானம்: 2 மாதங்களில் 29 பேர் கைது

Gavitha   / 2014 நவம்பர் 26 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சட்டவிரோத மதுபான உற்பத்தி, விற்பனை தொடர்பில் கடந்த ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தின் 25ஆம் திகதி வரையில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி, முல்லைத்தீவு வட்டார மதுவரி திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு கிளிநொச்சி, முல்லைத்தீவு நீதிமன்றங்களால் 66 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.

மதுவரித்திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில், கசிப்பு உற்பத்தி, விற்பனை, அனுமதிப்பத்திரமின்றி மதுபான விற்பனை, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலதிகமாக கள் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் ஒக்டோபர் மாதம் 19 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு நீதிமன்றங்களால் மொத்தமாக 41 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோல், இம்மாதம் 01ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையில் மேற்படி குற்றங்களில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு நீதிமன்றங்களால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .