2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வடமராட்சி வடக்கில் 3,790 பேர் பாதிப்பு

Menaka Mookandi   / 2014 நவம்பர் 30 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா

யாழ்ப்பாணத்தில் தற்போது பெய்துவரும் மழை காரணமாக பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வடமராட்சி வடக்கு பகுதியைச் சேர்ந்த 1,118 குடும்பங்களைச் சேர்ந்த 3,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பிரதேச செயலாளர் ரி.ஜெயசீலன் ஞாயிற்றுக்கிழமை (30) தெரிவித்தார்.

இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களை சேர்ந்த மக்களில் 255 குடும்பங்களை சேர்ந்த 938 பேரை செம்மின், பொலிகண்டி, உதயமலர், திருமால் ஆகிய பிரதேசங்களில் உருவாக்கப்பட்ட தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தங்கவைக்கப்பட்ட மக்களுக்கு மூன்று நேரத்துக்கு உடனடி உணவுகளை வழங்கி வருகின்றோம்.

அத்துடன், மழையால் பாதிக்கப்பட்டும் தங்கள் வீடுகளில் வசித்து வரும் 266 குடும்பங்களை சேர்ந்த 1,000 பேருக்கு 3 நாட்களுக்கு தேவையான உலர் உணவுகளை வழங்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .