2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கடந்த வாரத்தில் 8 இலட்சத்து 11 ஆயிரத்து 478 ரூபாய் கொள்ளை

Kogilavani   / 2014 ஜூலை 11 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா, பொ.சோபிகா

யாழ்.மாவட்டத்தில் யாழ், காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளில் கடந்த வாரத்தில் மாத்திரம் 8 இலட்சத்து 11 ஆயிரத்து 478 ரூபாய் பெறுமதியான நகை, பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு. பி. விமலசேன இன்று வெள்ளிக்கிழமை (11) தெரிவித்தார்.

யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டின் கீழ் பொலிஸ் தலைமையகத்தில் இம்மாதத்திற்கான முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேற்படி கொள்ளைச் சம்பவங்களில், கொடிகாமம் பகுதியில் கடந்த 6ஆம் திகதி 4 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதே கடந்த வாரத்தில் இடம்பெற்ற அதிகூடிய பெறுமதியிலான கொள்ளைச் சம்பவம் எனத் தெரிவித்தார்.

மேற்படி கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில், சந்தேக நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டு அந்தந்தப் பிரதேச நீதிமன்றங்களினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மற்றய கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .