Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 27 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணம் நகர மத்திய மரக்கறிச் சந்தை அமைந்துள்ள இடத்தில் நூறு கடைகளைக் கொண்ட நவீன சந்தைக் கட்டிடமொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இக்கட்டிடத் தொகுதியின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ளதாகத்; பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி மற்றும் முயற்சித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இக்கட்டிட நிர்மாணப் பணிக்காக 1500 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
யாழ். மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள உயரமான கட்டிடமாக இது அமையவுள்ளது. இக்கட்டிட நிர்மாணத்துக்கான அடிக்கல் ஏற்கனவே நாட்டப்பட்டுள்ள நிலையில், நிதியுதவிகள் கிடைத்ததும் இதற்கான வேலை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இதேவேளை, புதிய கட்டிடம் அமைக்கப்படவுள்ளதால், இச்சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில்; ஈடுபட்டு வரும் மரக்கறி, வெற்றிலை, தேங்காய், பழ வியாபாரிகளுக்கு முற்றவெளியில் தற்காலிக சந்தை அமைத்துக்கொடுக்கப்படவுள்ளது. அத்துடன் அழகுசாதானப் பொருட்கள், புடவை வியாபாரிகளுக்கு மின்சார நிலைய வீதியில் இடம் ஒதுக்கிக்கொடுக்கப்படவுள்ளதாக யாழ். மாரநகரசபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.
3 hours ago
9 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
22 Dec 2025