2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சர்வதேச புகைப்படக் கண்காட்சில் 108 பேரின் புகைப்படங்கள் காட்சி

Kogilavani   / 2014 பெப்ரவரி 14 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்திதங்கராசா, எஸ்.கே.பிரசாத்

தேசிய நிழற்பட கண்காட்சி அலுவலகம் எதிர்வரும் 22,23 தினங்களில் யாழில் நடத்தவுள்ள 16 ஆவது சர்வதேச புகைப்படக் கண்காட்சியில் 27 நாடுகளைச் சேர்ந்த 108 பேரின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தவுள்ளதாக வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் வியாழக்கிழமை (13) தெரிவித்தார். 

வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ்.பொது நூலகத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தனர்.

இதன்படி, யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் இக்கண்காட்சி நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியில், யாழ்.மாவட்டத்தின் பாடசாலை மாணவர்கள், புகைப்பட கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் தங்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் காட்சிப்படுத்த முடியுமெனவும்  அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .