2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சிற்றூழியர்கள் 168 பேருக்கு நிரந்தர நியமனம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 26 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். போதனா வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் 168 பேருக்கு இன்று வியாழக்கிழமை நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த 5 வருடங்களாக தற்காலிக தொண்டர்களாகக் கடமையாற்றி வந்த செஞ்சிலுவைச் சங்க, சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் ஆகியவற்றைச்; சேர்ந்த 44 பேருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சிற்றூழியர்களுக்கான நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 124 பேருக்கும் நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
 
மேற்படி சிற்றூழியர்களுக்கான நியமனக் கடிதங்களின் உத்தியோகபூர்வத் திகதி 2014ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிக்கின்றது.

சுகாதார அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட மேற்படி சிற்றூழியர்களுக்கான  நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பவானி பசுபதிராஜா தலைமையில் வைத்தியசாலை தாதியர் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரின் அலென்ரின், யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜா, யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர் என்.வசந்தகுமார், யாழ். போதனா வைத்தியசாலை மேற்பார்வையாளர், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .