2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கல்விக்காக 2,673 மில்லியன் ரூபாய் செலவு

George   / 2014 டிசெம்பர் 15 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் கல்வி சார்ந்த உட்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு 2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு இக்காலப்பகுதி வரையில் 2,673.83 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் ஆண்டறிக்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

2009 ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 104 பாடசாலைகள் தற்போது கல்வி செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றன.

இந்த பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பொருட்டு அரச, மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதியுதவி மூலம் 607 திட்டங்கள் இதுவரையில் முன்னெடுக்கப்பட்டு, 2,673.83 மில்லியன் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 104 பாடசாலைகளில் 31 ஆயிரத்து 945 மாணவர்கள் கல்விகற்று வருவதுடன் 1,649 ஆசிரியர்கள் கடமையாற்றி வருவதாக அந்த ஆண்டறிக்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .