2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

3 ½ பவுண் தாலிக் கொடி அறுப்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 13 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி

பண்டத்தரிப்பு சாந்தைப் பகுதியினைச் சேர்ந்த பெண்ணொருவரின் 3 ½ பவுண் தாலிக் கொடியினை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துச் சென்ற சம்பவம் புதன்கிழமை (12) பனிப்புலம் அம்மன் கோவிலடியில் இடம்பெற்றுள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பெண் தனது பிள்ளையினை முன்பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றவேளை, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண்ணின் தாலிக்கொடியினை அறுத்துச் சென்றதாக குறித்த பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .