2025 ஜூலை 14, திங்கட்கிழமை

புதிதாக 33 கிராமஅலுவலர்கள் இணைப்பு

Kogilavani   / 2014 ஒக்டோபர் 09 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ்.மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களின் கடமையாற்றுவதற்கு 33 கிராம அலுவலர்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் வியாழக்கிழமை (9) தெரிவித்தார்.

கிராம அலுவலர்களுக்கு நிலவும் வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் வகையில் புதியவர்களை கிராம அலுவலர்களாக இணைத்துள்ளதாக அவர் கூறினார்.

புதிதாக இணைக்கப்பட்டவர்கள் 6 மாத காலத்துக்கு கிராமஅலுவலர் பயிற்சியில் உட்படுத்தப்படவுள்ளனர்.

அதனை தொடர்ந்து அவர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டு, கிராம அலுவலர்களாக வெற்றிடங்கள் நிலவும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றுவார்கள்.

இதேவேளை, ஏற்கனவே இணைக்கப்பட்டு கிராம அலுவலர்களாக பயிற்சி பெற்ற 95 பேருக்கான நியமனக்கடிதங்கள் புதன்கிழமை (8) வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .