2025 மே 17, சனிக்கிழமை

யாழ்.மாவட்டத்தில் 39,120,341 சதுரமீற்றர் பரப்பளவில் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன

Kogilavani   / 2012 ஜனவரி 03 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.மாவட்டத்தில் கடந்த 2011 ஜனவரி முதல் டிசம்பர் 22 ஆம் திகதி வரை மிதிவெடி மற்றும் கண்ணிவெடிகள் உள்ள பிரதேசங்களாக 44,898,662 சதுரமீற்றர் பரப்பளவு இனங்காணப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட மிதிவெடி செயற்பாட்டு அலுவலகம் அறிவித்துள்ளது

இதில் யாழில் 39,120,341 சதுரமீற்றர் பரப்பளவில் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளது. 5,778,321 சதுரமீற்றர் பரப்பளவு மிதிவெடி அகற்றப்பட்ட  பிரதேசங்களாக இனங்காணப்பட்டுள்ளன.

இதேவேளை, 113,236 கண்ணிவெடுகள் கண்டு எடுக்கப்பட்டுள்ளதுடன் வாகனங்கள் மற்றும் பாரிய வெடிபொருட்கள் 255 மீட்கப்பட்டுள்ளதாகவும் வெடிக்காத ஏனைய பொருட்கள் 103, 930 கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட மிதிவெடி செயற்பாட்டு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது

இதேவேளை 2011 ஜனவரி முதல் டிசம்பர் 22 திகதி வரை 731 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட மிதிவெடி செயற்பாட்டு அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .