2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

யாழில் 404 குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன

George   / 2014 நவம்பர் 25 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யோ.வித்தியா


யாழ். மாவட்டத்தில் 1996ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் 404 குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக கமநலசேவைகள் திணைக்கள வடமாகாண பிரதி ஆணையாளர் எம்.பற்றிக் நிறைஞன், செவ்வாய்க்கிழமை (25) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

யாழ். மாவட்டத்தில் 992 குளங்கள் இருக்கின்றன. யாழ்ப்பாணத்திலுள்ள குளங்களின் குளக்கட்டுக்கள் மண்களால் அமைக்கப்பட்ட குளங்களாகவே காணப்படுகின்றன. இதனால் அவை அடிக்கடி தூர்ந்து போகின்றன.

இதனால், அவற்றை அடிக்கடி புனரமைக்க வேண்டிய தேவையும் காணப்படுகின்றன. அத்துடன், குளங்களை ஆழமாக்கும் போது குளங்களின் நீர் உப்புத்தன்மையாக மாறுகின்ற பிரச்சினைகளும் எதிர்நோக்க வேண்டியுள்ளது.

இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு மிகுதி குளங்களின் புனரமைப்பு பணிகளும் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .