Suganthini Ratnam / 2011 ஜனவரி 17 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். நாவற்குழி நான்காம் மைல்கல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பிள்ளைகளின் தந்தையான ஒருவர் பலியாகியுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏ - 9 பாதையில் சென்ற பஸ் குறித்த நபர் பயணம் செய்த சைக்கிளுடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
யாழ். தச்சன்தோப்பு வெளியைச் சேர்ந்த அ.வேதநாயகம் (வயது 50) என்பவரே இவ்விபத்தில் பலியானவர் ஆவர்.
இவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
7 hours ago
niroshan Monday, 17 January 2011 05:38 PM
உங்கள் வெப் சைடு ஒரு நல்ல பயனுள்ளது
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago