2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

யாழில் 7 உணவகங்களுக்கு தண்டம்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 12 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கோப்பாய் சுகாதார சேவைகள் பிரிவிலுள்ள ஏழு உணவகங்களுக்கு மல்லாகம் நீதிமன்றத்தினால் 21 ஆயிரம் தண்டப்பணம் இன்று (12) விதிக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் சுகாதார பரிசோதகர்களினால் தமது பிரிவிற்குட்பட்ட உணவகங்களில் கடந்த வாரம் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது, பாவனைக்கு உதவாத வகையில் பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் அவ்வாறான பொருட்களைக் காட்சிப்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் அச்சுவேலி பகுதியிலுள்ள 3 உணவகங்கள், புத்தூர் பகுதியிலுள்ள 3 உணவகங்கள், சிறுப்பிட்டியில் ஒரு உணவகம் உள்ளிட்ட 7 உணவகங்கள் பிடிக்கப்பட்டன.

தொடர்ந்து சுகாதார பரிசோதகர்களினால் அந்த உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் இன்று (12) வழக்குத் தொடரப்பட்டன.

நீதிபதி, குறித்த உணவகங்களின் உரிமையாளர்களை எச்சரிக்கை செய்ததுடன், ஏழு உணவக உரிமையாளர்களுக்கும் தலா 3000 ஆயிரம் ரூபா வீதம் தண்டப்பணம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .