A.P.Mathan / 2010 டிசெம்பர் 25 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்கனவே பல தடவைகள் நேரில் சென்று பார்வையிட்டதற்கு அமைவாக நீர்வேலி காமாட்சி அம்பாள் கூட்டுறவு கைத்தொழில் சங்கம் தொழிற்துறை சார்ந்து விரிவாக்கம் பெற உள்ளது.
ஏற்கனவே மேற்படி நிலையத்தை மீளத் திருத்தி அமைப்பதற்காக அமைச்சர், மகேஸ்வரி நிதியம் மூலமாக நிதி ஒதுக்கீட்டினை மேற்கொண்டிருந்த நிலையில் இன்றைய தினம் அங்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா- பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்பட்டு வருகின்ற கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 7 மில்லியன் ரூபா நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பில் கலந்துரையாடினார்.
இந்நிதியிலிருந்து 2.6 மில்லியன் ரூபா கட்டிடத் திருத்தத்திற்காகவும் ஏனைய நிதி இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்காகவும் துறைசார்ந்த பயிற்சிகளை வழங்குவதற்காகவும் உபயோகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் தொழில் முயற்சியாளர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கான அங்கத்துவங்களை வழங்குதல் வியாபார ஊக்குவிப்பு கூட்டுறவுத் திணைக்கள செயற்பாடுகளுக்கு இணங்கியதான நடைமுறை தொழிற்பாடுகள் தொழில் ஊக்குவிப்பு பயிற்சிகள் மற்றும் மேலதிக தொழில்நுட்ப அறிவினை வழங்குதல், வங்கி மற்றும் ஏனைய நிறுவனங்களுடனான இலகு கடன் வசதிகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் இன்று கலந்துரையாடப்பட்டன.
.jpg)
.jpg)
.jpg)
8 minute ago
5 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
5 hours ago
22 Dec 2025