Menaka Mookandi / 2010 டிசெம்பர் 24 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
நத்தார் தினத்தை முன்னிட்டு புனர்வாழ்வு நிலையங்களில் தங்கியிருந்த முன்னாள் புலி சந்தேக நபர்கள் 98பேர் நாளை காலை சனிக்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளனர் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.
வவுனியா நகர சபை கலாச்சார மண்டபத்தில் நடைபெறும் வைபவத்தில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டு பெற்றோர்கள் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்படுவர்.
இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் 1983ஆம் ஆண்டு கால பகுதியின் பின்னர் வன்செயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈடுகள் வழங்கும் வைபவத்தில் உரையாற்றியபோது மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
இந்த வைபவத்தில் மனிதவள அபிவிருத்தி அமைச்சர் டியூ குணசேகர மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர். 500பேர் நட்டஈட்டுக்குரிய காசோலைகளை அமைச்சிடமிருந்து பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
9 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
22 Dec 2025