Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 15 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன், செந்தூரன் பிரதீபன்
இந்தியாவில் இருந்து, சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 1 இலட்சத்து 32 ஆயிரம் பீடிக்கட்டுகள், மதுவரி உதவி ஆணையாளரின் பணிப்புரைக்கிணங்க, மதுவரித் திணைக்களத்தினரால், யாழ்ப்பாணம் - கோம்பயன்மணல்
மயானத்தில், இன்று (15) காலை எரித்தழிக்கப்பட்டன.
ஜூன் 26ஆம் திகதியன்று, இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட சுமார் 1 இலட்சத்து 32 ஆயிரம் பீடிக்கட்டுகள், வடமராட்சி கிழக்கு – மணற்காட்டுப் பகுதியில் வைத்து, மதுவரித் திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டன.
இதன்போது, சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டு, 2 இலட்சம் ரூபாய் அபராதத்துடன் விடுதலை செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடிக்கட்டுகள், நேற்றைய தினம், யாழ்ப்பாணம் மாவட்ட மதுவரித் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி பி.ரகுநாதன், மதுவரி அத்தியட்சகர் கிருபாகரன் ஆகியோர் முன்னிலையில், கோம்பயன்மணல் மயானத்தில் வைத்து, மண்ணெண்ணை ஊற்றி, எரித்து அழிக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 May 2025
12 May 2025