2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

110 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Niroshini   / 2021 ஜூன் 02 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், செந்தூரன் பிரதீபன்

யாழ்ப்பாணம் - மாதகல் கடற்கரை பகுதியில், 110 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர், கடற்படையினரால் இன்று (02) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாதகல் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றை அடுத்து. ஸ்தலத்துக்கு விரைந்த கடற்படையினர், குறித்த நபரை கைதுசெய்தனர்.

சந்தேகநபர், இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியுடையதென தெரிவிக்கப்படுகிறது.

இந்த கஞ்சா பொதி, இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வரப்பட்டுள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .