Princiya Dixci / 2022 மார்ச் 27 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள தட்டுவன்கொட்டி பிரதேசத்தில் 117 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் போக்குவரத்து வசதியின்மை மற்றும் அடிப்படை வசதிகள் இன்மையால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவர்களது பிரதான தொழிலாக மீன்பிடி மற்றும் விவசாயம் என்பன காணப்படுகின்றன.
மேற்படி கிராமத்தில் உள்ள பாடசாலை தரம் 11 வரையான வகுப்புகளை மாத்திரம் கொண்டிருந்த போதும் ஏனைய மாணவர்கள், உயர் கல்விக்காக பரந்தன் மற்றும் கிளிநொச்சி பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது.
அத்தோடு, வைத்தியத் தேவைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய தேவைகளுக்கும் 20 கிலோமீற்றர் கடந்து, கிளிநொச்சி, பரந்தன் ஆகிய இடங்களுக்கே செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது.
போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத நிலையில், இந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
2014ஆம் ஆண்டு, உலக உணவுத் திட்டத்தால் இம்மக்களின் மருத்துவத் தேவைக்கான போக்குவரத்துக்களுக்கு ஓட்டோ ஒன்று வழங்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த ஓட்டோ பழுதடைந்த நிலையில் காணப்படுவதால், இதனை திருத்தி பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago