2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

12 ஆயிரம் விவசாயிகளுக்கு உரமானியம்

George   / 2014 நவம்பர் 26 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ். மாவட்டத்திலுள்ள 12 ஆயிரத்து 109 விவசாயிகளுக்கு இவ்வருடத்திற்கான உரமானியங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கமநலசேவைகள் திணைக்கள வடமாகாண பிரதி ஆணையாளர் எம்.பற்றிக் நிறைஞ்சன், புதன்கிழமை (26) தெரிவித்தார்.

யாழ். மாவட்;டத்தில் 18 ஆயிரத்து 270 ஏக்கர் வரையான நிலப்பரப்பில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. 

தற்போது, பருவ மழை ஆரம்பித்துள்ளமையால் விவசாயிகள் தங்கள் காலபோக நெற்செய்கையை ஆரம்பித்துள்ளனர்.

18 ஆயிரத்து 270 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கைகள் மேற்கொள்ளும் 12 ஆயிரத்து 109 விவசாயிகளுக்கு உரமானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

மேலும் 10 ஆயிரம் ஏக்கருக்கான மானிய உரங்கள் வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் கூறினார்;.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .