2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

132 கிலோ கஞ்சா; இரண்டாவது சந்தேக நபரும் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூலை 03 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். மாதகல் துறைமுகத்தில் ஜுன் மாதம் 19ஆம் திகதி கைப்பற்றப்பட்ட 132 கிலோகிராம் கஞ்சாவுடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேக நபரை  வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரின் விசேட பொலிஸ் பிரிவினர் முல்லைத்தீவில் புதன்கிழமை (02)  கைதுசெய்ததாக காங்கேசன்துறை பொலிஸ் பிரிவு பொலிஸார் இன்று வியாழக்கிழமை (03) தெரிவித்தனர்.

மாதகல் புன்னகைப்புலத்தைச்; சேர்ந்த ஜேசுநாயகம் அன்ரன் விமல்ராஜ் என்பவரே கைதுசெய்யப்பட்டார்.

ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட 19 வயதான சந்தேக  நபர் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டுவரும் நிலையில், தப்பியோடிய இரண்டாவது சந்தேக  நபரும் கைதுசெய்யப்பட்டார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ். மாதகல் துறைமுகத்தில் கடந்த ஜுன் மாதம்  19ஆம் திகதி ஒரு கோடி 32 இலட்சம் ரூபா பெறுமதியான  132 கிலோகிராம்  கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன.  இந்தக் கஞ்சா பொதிகளுடன் நின்றிருந்த  02 சந்தேக நபர்களில் ஒருவர்   கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மாதகல், புன்னகைப்புலம் பகுதியைச்  சேர்ந்த 19 வயதான ஒருவரே இதன்போது கைதுசெய்யப்பட்டிருந்தார்.

மற்றைய சந்தேக நபர் கடல் மார்க்கமாக தப்பித்துச் சென்றிருந்தார்.

இந்த நிலையில் தப்பியோடிய சந்தேக  நபரை கைதுசெய்வதற்கான  நடவடிக்கைகளை காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் பொலிஸார் மேற்கொண்டு வந்ததன்   அடிப்படையில், இரண்டாவது சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.

ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டு காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.

யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவில் இதுவே அதிகூடிய பெறுமதியுடைய கஞ்சா எனவும் அவர் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .