Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 10 , பி.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, யாழ்ப்பாணத்தில் இதுவரையில் ஏழு கட்சிகளும், ஒரு சுயேட்சைக் குழுவும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக, யாழ்.மாவட்ட செயலக தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியன 17 சபைகளுக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பரமுன, இலங்கை தமிழரசு கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஆகியன சாவகச்சேரி நகரசபைக்கும் கட்டுபணத்தை செலுத்தியுள்ளன.
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி சாவகச்சேரி, வலி மேற்கு, நல்லூர் ஆகிய பிரதேச சபைகளுக்கும் யாழ். மாநகர சபைக்கும் கட்டுபணத்தை செலுத்தியுள்ளது.
சுயேட்சை குழுவொன்று, வலிமேற்கு பிரதேச சபைக்கு மாத்திரம் கட்டுபணத்தைச் செலுத்தியுள்ளது.
மேலும், கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் தமது கட்டுபணத்தை, எதிர்வரும் 14ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை செலுத்த முடியும் எனவும் சாவகச்சேரி நகர சபைக்கான வேட்புமனுக்களை எதிர்வரும் 18ஆம் திகதியில் இருந்து 21ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை செலுத்த முடியும் எனவும் யாழ். மாவட்ட செயலக தேர்தல் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025