Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 06 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜிதா
நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்க 17,273 பேர் தகுதி பெற்றுள்ளனர். தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதென, யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தபால் மூலம் வாக்களிக்க யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்துக்கு விண்ணப்பத்தவர்களில், 17,273 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர்.
தபால் மூல வாக்காளர்கள் எதிர்வரும் 22, 25, 26 ஆம் திகதிகளில் தமது வாக்குகளை அளிக் கமுடியும். 22 ஆம் திகதி தேர்தல் திணைக்களம், மாவட்ட செயலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களிலும், 25, 26 ஆம் திகதிகளில் ஏனைய அரச அலுவலகங்கள் கல்வி அலுவலகங்கள், பாடசாலைகள், போக்குவரத்துச் சபை டிப்போக்கள், பாதுகாப்பு படை முகாம்கள் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்களில் தபால் மூல வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும் என்றும், யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவக தகவல்கள் தெரிவிக்கின்றன.
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago