2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

18 நீர்த்தாங்கிகள் கையளிப்பு

Sudharshini   / 2014 நவம்பர் 29 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


- ற.றஜீவன்

வலி.தெற்கு (சுன்னாகம்) பிரதேசசபைக்கான ஆயிரம் லீட்டர் கொள்ளளவுடைய 18 நீர் தாங்கிகள் வடமாகாணசபை உறுப்பினரான பா.கஜதீபனின் ஏற்பாட்டில் இலண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் உதவியுடன்  வெள்ளிக்கிழமை (28) கையளிக்கப்பட்டுள்ளன.

இந்நீர்த்தாங்கிகளை வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வலி.தெற்கு பிரதேசசபைத்தலைவர் தி.பிரகாஷ் மற்றும் சபையின் செயலாளரிடம் கையளித்தார்.

சுன்னாகத்தில் இயங்கிவரும் இலங்கை மின்சார சபையின் கழிவு எண்ணை நிலத்துக்குள் கசிந்து, நிலத்தடி நீர் மாசடைந்துள்ளமையால் அப்பகுதி மக்கள் குடிநீருக்கான நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை வலி.தெற்கு பிரதேசசபை மேற்கொண்டு வந்தது.

இதனிடையே, அங்குள்ள பல கிணறுகள் பாதிப்படைந்து வரும் சூழ்நிலையில், நீர்த்தாங்கிகளின் தேவை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தகது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .