2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

20 கி.கி கஞ்சா மீட்பு: இருவர் கைது

Editorial   / 2020 ஜூலை 14 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ். - சாவகச்சேரி நகரில் கைமாற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட 20 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதோடு, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்துக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பேரிலேயே, நேற்றிரவு 7.30 மணியளவில் இந்தக் கஞ்சா  கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது, திரிகோணமலையைச் சேர்ந்த ஒருவரும், சாவகச்சேரியைச் சேர்ந்த ஒருவருமே  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களை இன்று, சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக, மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X