Super User / 2010 செப்டெம்பர் 22 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஞானசெந்தூரன்)
யாழ். மாவட்டத்தில் நெற்பயிற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் விதைநெல் மற்றும் உரப்பசளை என்பவற்றை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் முதற் கட்டமாக விவசாய சம்மேளனங்கள் ஊடாக விவரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
கமநலசேவை நிலையங்கள், விவசாய சம்மேளனங்கள் ஊடாக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் பெயர்விவரம், பயிற்செய்கை மேற்கொள்ளப்படும் நிலத்தின் விஸ்தீரணம், காணி உரிமையின் தன்மை போன்ற விவரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயி ஒருவருக்கு மானிய அடிப்படையில் உரம் வழங்கப்படவுள்ளதுடன் விவசாயிகளின் தன்மைக்கு ஏற்ப இலவசமாக விதை நெல்லும் வழங்கப்படவுள்ளது.
58 minute ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
23 Dec 2025