Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 26 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(நவம்)
பெற்றோர்களே ஆசிரியர்களே எமக்கு பாதுகாப்பையும் ஆதரவையும் அன்பையும் அரவணைப்பையும் தாருங்கள் என்ற வாசகங்கள் ஏந்திய பதாகைகளுடன் நேற்று சனிக்கிழமை ஏழாலை தெற்கு ஸ்ரீ முருகன் சிறுவர் கழகச் சிறார்கள் சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி சமாதானப் பேரணியொன்றை ஏழாலைப் பகுதியில் நடத்தியுள்ளனர்.
இந்த சமாதானப் பேரணியில் உடுவில் பிரதேச செயலக நிர்வாகக் கிராம அலுவலர் நவரத்தினராசா, சிறுவர் மேம்பாட்டு அலுவலர் திருமதி சந்திரா நக்கீரன், கிராம அலுவலர் ஜெயகரன் சிறுவர் நிதிய இனைப்பாளர் மகேந்திரன் சாந்திக நிறுவன இணைப்பாளர் விஜயரெட்னம் உட்பட மற்றும் பெற்றோர்களும் இளைஞர்களும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
உடுவில் பிரதேச செயலக சிறுவர் பகுதியும் சாந்திகம் சிறுவர் நிதியம் இலங்கையும் மற்றும் சாந்திகம் நிறுவனமும் இணைந்து சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
பல்வேறு சுலோக அட்டைகளையும் ஏந்திய சிறுவர்களின் ஊர்வலம் சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரத்திற்கு சென்று மீண்டும் ஆரம்பித்த இடமான ஜரோப்பிய மண்டபத்தை வந்தடைந்தது.
.jpg)
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .